வீட்டிலும் பிசியோதெரபி சிகிச்சை பெறலாம்கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இச்சேவை உள்ளது. உங்கள் பகுதிக்கு வர முடியுமா என்பதை அழைத்துக் கேட்டறியுங்கள்.வீட்டுச் சிகிச்சை குறித்து விசாரிக்கவும்

கும்பகோணத்தில் இரு இடங்களில் சிகிச்சை

கும்பகோணத்தில் பிசியோதெரபி சிகிச்சை

வலி குறையட்டும். அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கை கூடட்டும்.

காந்தியடிகள் சாலை மற்றும் செட்டிமண்டபத்தில், உங்கள் உடல்நிலையை மதிப்பிட்டு, உங்களுக்கேற்ற சிகிச்சையும் மறுவாழ்வுப் பயிற்சிகளும் வழங்குகிறோம். உங்கள் சிரமங்கள், உடல் இயக்கம், அன்றாடத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிகிச்சையைத் திட்டமிடுகிறோம்.

திங்கள் முதல் சனி வரை திறந்திருக்கும்
இரு கிளினிக்குகளிலும்: காலை 10–மதியம் 1 மணி; மாலை 5–இரவு 8 மணி

ஸ்ரீ பிசியோவின் மூத்த பிசியோதெரபிஸ்ட் டாக்டர் N. T. ஸ்ரீலதா குபேந்திரன்
23 ஆண்டுகளுக்கும் மேலான சிகிச்சை அனுபவம்டாக்டர் N. T. ஸ்ரீலதா குபேந்திரன்BPT · MIAP · MSc Psychologyஎங்கள் பிசியோதெரபி குழுவை அறிந்துகொள்ளுங்கள்

எங்கள் குழுவை அறிந்துகொள்ளுங்கள்

உங்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்கள்

ஸ்ரீ பிசியோதெரபி கிளினிக்கில் டாக்டர் N. T. ஸ்ரீலதா குபேந்திரன்

மூத்த பிசியோதெரபிஸ்ட் · 23 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்

டாக்டர் N. T. ஸ்ரீலதா குபேந்திரன்

டாக்டர் N. T. ஸ்ரீலதா குபேந்திரன்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். பெண்கள் நலம், குழந்தைகள் மறுவாழ்வு, நரம்பியல் மறுவாழ்வு ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார்.

BPTபிசியோதெரபி இளநிலைப் பட்டம்
MIAPஇந்திய பிசியோதெரபிஸ்ட்கள் சங்க உறுப்பினர்
MScஉளவியல் முதுநிலைப் பட்டம்
ஸ்ரீ பிசியோதெரபி கிளினிக்கில் டாக்டர் K. ஆதிஷ் குபேந்திரன்

இளநிலை பிசியோதெரபிஸ்ட்

டாக்டர் K. ஆதிஷ் குபேந்திரன்

டாக்டர் K. ஆதிஷ் குபேந்திரன்

BPT · MIAP
இந்திய பிசியோதெரபிஸ்ட்கள் சங்க உறுப்பினர்

நாங்கள் எப்படி உதவ முடியும்?

அன்றாடச் செயல்களை எளிதாகச் செய்ய உதவும் சிகிச்சை

உங்கள் சிரமங்களைக் கேட்டறிந்து, உடல்நிலையைப் பரிசோதித்து, நீங்கள் மீண்டும் செய்ய விரும்பும் செயல்களைப் புரிந்துகொள்வதில் இருந்தே ஒவ்வொரு சிகிச்சைத் திட்டமும் தொடங்குகிறது.

மூட்டு, தசை மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள்

மூட்டு, தசை, கழுத்து, முதுகு ஆகியவற்றில் ஏற்படும் வலி மற்றும் இயக்கச் சிரமங்களை மதிப்பிட்டு, தேவையான சிகிச்சையும் பயிற்சிகளும் அளிக்கிறோம். விளையாட்டுக் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வுக்கும் உதவுகிறோம்.

கீழ்முதுகு மற்றும் முதுகுத்தண்டு சிகிச்சை கழுத்து மற்றும் தாடை மூட்டு சிகிச்சை முழங்கால் வலிக்கான சிகிச்சை

பெண்கள் நலம் மற்றும் இடுப்புத்தளத் தசைப் பயிற்சிகள்

சிறுநீர்ப்பை, கருப்பை போன்ற உறுப்புகளைத் தாங்கும் இடுப்புத்தளத் தசைகள் சார்ந்த பிரச்சினைகள், சிறுநீர் கசிவு, கருப்பை இறக்கம் ஆகியவற்றுக்கான மறுவாழ்வுச் சிகிச்சை. வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, தனியுரிமைக்கும் மரியாதைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

இடுப்புத்தளத் தசைச் சிகிச்சை பற்றி அறிய

குழந்தைகளுக்கான வளர்ச்சி மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகள்

குழந்தைகள் தங்களுக்கேற்ற வேகத்தில் உடல் இயக்கம், அசைவுகளின் ஒருங்கிணைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறோம். விளையாட்டை இணைத்த பயிற்சிகளும், புலன்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைக்க உதவும் பயிற்சிகளும் இதில் அடங்கும். புதிய திறன்களை வளர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட திறன்களை மீண்டும் பெறுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

குழந்தைகளுக்கான பயிற்சிகள் பற்றி அறிய

நரம்பியல் மறுவாழ்வு

பக்கவாதம், இரு கால்கள் அல்லது நான்கு கை–கால்களின் இயக்கம் பாதிக்கப்பட்ட நிலைகள், பார்கின்சன் அறிகுறிகள் கொண்ட நிலைகள், கில்லன்–பாரே நோய்க்குறி (Guillain–Barré syndrome), இயக்க நரம்பணு நோய் (MND) ஆகியவற்றுக்கான மறுவாழ்வுப் பயிற்சிகள். அன்றாடச் செயல்களைச் செய்வதற்கும், இயன்ற அளவு பிறர் உதவியின்றிச் செயல்படுவதற்கும் உதவுவதே நோக்கம்.

நரம்பியல் மறுவாழ்வு பற்றி அறிய
மேலும் சில சிகிச்சைகள் முதியோர் நலம், விளையாட்டுக் காயங்கள், உடல் சமநிலை, இதயம் மற்றும் நுரையீரல் மறுவாழ்வு, சிகிச்சை முறைகள்

முதியோருக்கான மறுவாழ்வுப் பயிற்சிகள்

உடல் சமநிலையைப் பேணவும், அன்றாடச் செயல்களைச் செய்யவும், இயன்ற அளவு சுயமாக இயங்கவும் உதவும் உடற்பயிற்சிகள் மற்றும் மறுவாழ்வுச் சிகிச்சை.

முதியோருக்கான சிகிச்சை பற்றி அறிய

விளையாட்டுக் காயங்களுக்கான மறுவாழ்வு

விளையாட்டின்போது ஏற்படும் வலி மற்றும் காயங்களுக்கான படிப்படியான மறுவாழ்வுப் பயிற்சிகள். உடல் வலிமையை மீண்டும் வளர்த்து, விளையாட்டிலும் பிற செயல்களிலும் திரும்ப ஈடுபட உதவுகிறோம்.

விளையாட்டுக் காயங்களுக்கான சிகிச்சை பற்றி அறிய

தலைச்சுற்றல் மற்றும் உடல் சமநிலைக்கான சிகிச்சை

உடல்நிலையை மதிப்பிட்டு, தலைச்சுற்றல் மற்றும் சமநிலைச் சிரமங்களுக்கான பயிற்சிகளைத் திட்டமிடுகிறோம். தலை இருக்கும் நிலை மாறும்போது ஏற்படும் ஒரு வகைத் தலைச்சுற்றல் (BPPV), நிற்கும்போதும் நகரும்போதும் அல்லது சுற்றியுள்ள காட்சிகளாலும் அதிகரிக்கும் நீடித்த மயக்க உணர்வு (PPPD), கழுத்துப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய தலைச்சுற்றல் ஆகியவற்றுக்கான மறுவாழ்வும் இதில் அடங்கும்.

தலைச்சுற்றலுக்கான சிகிச்சை பற்றி அறிய

இதயம், மார்பு மற்றும் நுரையீரல் சார்ந்த மறுவாழ்வு

இதய பைபாஸ் அறுவை சிகிச்சை (CABG), ஆஞ்சியோபிளாஸ்டி, இதய வால்வு அல்லது நுரையீரல் அறுவை சிகிச்சை, இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு முன்னும் பின்னும் தேவையான மறுவாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD), ஆஸ்துமா, நுரையீரல் திசு நார்த்தன்மை அடைதல், கோவிட் தொற்றுக்குப் பிந்தைய பாதிப்புகள், சுவாசத் தசைகளின் பலவீனம் ஆகியவற்றுக்கும் சிகிச்சைத் திட்டத்திற்கேற்ற பயிற்சிகள் அளிக்கிறோம்.

இதயம் மற்றும் நுரையீரல் மறுவாழ்வு பற்றி அறிய

இதய மறுவாழ்வுப் பயிற்சிகள்

மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத்திற்குச் செல்லும் தமனிகளில் ஏற்படும் நோய் ஆகியவற்றுக்குப் பின்னரும், இதய அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் பொருத்துதல், இதயத் துடிப்பைச் சீராக்கும் அப்லேஷன் சிகிச்சை அல்லது இதயச் சாதனம் பொருத்துதல் ஆகியவற்றுக்குப் பின்னரும் உடல் தாங்குதிறனையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதயத்திற்குப் போதிய ரத்த ஓட்டம் கிடைக்காததால் ஏற்படும் நெஞ்சுவலி (Angina), உயர் ரத்த அழுத்தம், கை–கால்களுக்குச் செல்லும் தமனிகளில் ஏற்படும் நோய், நுரையீரல் தமனிகளில் உயர் அழுத்தம் ஆகியவற்றுடன் வாழ்பவர்களுக்கும், உடல்நிலைக்கேற்ப திட்டமிடப்பட்ட பயிற்சிகள் உதவக்கூடும்.

இதய மறுவாழ்வு பற்றி அறிய

சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முறைகள்

உங்கள் உடல்நிலைக்கும் தேவைக்கும் பொருத்தமாக இருந்தால், மின்சிகிச்சை முறைகள் (IFT, TENS), அல்ட்ராசவுண்ட் சிகிச்சை, மின்தூண்டல், இழுவைச் சிகிச்சை, மெழுகு வெப்பச் சிகிச்சை, ஈர வெப்பச் சிகிச்சை, இணைந்த சிகிச்சை முறைகள் மற்றும் குறுகிய அலை வெப்பச் சிகிச்சை (SWD) ஆகியவை பயன்படுத்தப்படலாம்.

சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ளுங்கள்

நேரில் வருவதற்கு

கும்பகோணத்தில் எங்கள் முகவரிகள்

B

காலையிலும் மாலையிலும் சிகிச்சை பெறலாம்

ஸ்ரீ பிசியோதெரபி கிளினிக்

வட்டிப்பிள்ளையார்கோவில் பிரதான சாலை
லக்ஷ்மி மார்பிள்ஸ் அருகில், சக்தி ஹோண்டா விற்பனையகத்திற்கு எதிரில்
செட்டிமண்டபம், கும்பகோணம்

முன்பதிவுக்கு: 94435 7848694442 87486

காலை10–மதியம் 1 மணி

மாலை5–இரவு 8 மணி

வரைபடத்தைத் திறக்கும்போது, உங்கள் IP முகவரியும் உலாவி பற்றிய தகவல்களும் Google-க்குச் செல்லும். Google குக்கீகளையும் பயன்படுத்தக்கூடும்.

தனியுரிமை விவரங்கள் · கீழே உள்ள வழிகாட்டுதல் இணைப்பைப் பயன்படுத்தலாம்; அல்லது எங்களை அழைக்கலாம்.

வழியை அறிய, கிளினிக்கின் இருப்பிடத்தை Google Maps-இல் பார்க்கவும்.

Google Maps-இல் பார்க்கவும்

திங்கள் முதல் சனி வரை திறந்திருக்கும் · ஞாயிறு விடுமுறை

நீங்கள் எதிர்பார்க்கக்கூடியவை

சிகிச்சைக்கு வரும்போது…

  1. 01

    உங்கள் சிரமங்களைக் கேட்டறிவோம்

    அறிகுறிகள், உடல் இயக்கம், அன்றாட வாழ்வில் நீங்கள் செய்ய விரும்பும் செயல்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்து மதிப்பிடுவோம்.

  2. 02

    உங்களுக்கேற்ற சிகிச்சையைத் திட்டமிடுவோம்

    உங்கள் உடல்நிலைக்கும், நீங்கள் படிப்படியாக முன்னேறும் வேகத்திற்கும் ஏற்ற சிகிச்சை முறையைத் திட்டமிடுவோம்.

  3. 03

    சிகிச்சையுடன் வழிகாட்டுதலும் அளிப்போம்

    கைகளால் அளிக்கும் சிகிச்சை, தேவைக்கேற்ற பிற சிகிச்சை முறைகள், உடற்பயிற்சிகள், நடைமுறை வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை இணைத்துப் பயன்படுத்துவோம்.

  4. 04

    முன்னேற்றத்தைத் தொடர உதவுவோம்

    கிளினிக்கிற்கு வெளியேயும், அன்றாட வாழ்க்கையில் உறுதியுடனும் பாதுகாப்பாகவும் இயங்க மறுவாழ்வுப் பயிற்சிகள் உதவும்.

பெண்களுக்கான பிசியோதெரபி

தயக்கத்தால் சொல்லாமல் இருக்கும் சிரமங்களுக்கும், தனியுரிமையுடன் சிகிச்சை

இடுப்புத்தளத் தசைகள் சார்ந்த பிரச்சினைகள் உங்கள் உடல் சௌகரியம், தன்னம்பிக்கை, அன்றாட வாழ்க்கை ஆகியவற்றைப் பாதிக்கலாம். உங்கள் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு, மீள்வதற்கான முயற்சிகளில் பங்கேற்க, மரியாதையுடன் வழங்கப்படும் பிசியோதெரபி சிகிச்சை உதவும்.

தனிப்பட்ட சந்திப்பிற்கு முன்பதிவு செய்ய அழைக்கவும்
இடுப்புத்தளத் தசைகளுக்கான மறுவாழ்வுசிறுநீர் கசிவுகருப்பை இறக்கம்கர்ப்பகாலப் பயிற்சிகள்பிரசவத்திற்குப் பிந்தைய மீட்புவயிற்றின் முன்புறத் தசைகளுக்கு இடையில் இடைவெளி அதிகரித்தல் (Diastasis recti)

சிகிச்சை பெற்றவரின் வார்த்தைகளில்

அன்றாட வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அக்கறை

★★★★★
“மிகச் சிறந்த பிசியோதெரபிஸ்ட். எனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையைத் தந்தார்கள். என்னை மீண்டும் நடக்க வைத்தார்கள். ஒவ்வொரு படியிலும் சரியாக வழிகாட்டுகிறார்கள். பயனுள்ள, தனிப்பட்ட தேவைகளுக்கேற்ற பிசியோதெரபி சிகிச்சையை நாடுபவர்களுக்கு இவர்களை மனமாரப் பரிந்துரைக்கிறேன்.”
Sutha Sundarஆங்கிலத்தில் பதிவிட்ட கருத்தின் தமிழாக்கம்
Google-இல் கருத்துகளைப் படிக்கவும்

ஸ்ரீ பிசியோவுடன் அறிந்துகொள்ளுங்கள்

உங்கள் உடலைப் புரிந்துகொள்ளுங்கள். நம்பிக்கையுடன் இயங்குங்கள்.

அனைத்துக் கட்டுரைகளையும் பார்க்கவும் ↗

வருகைக்கு முன்

உங்கள் கேள்விகளுக்குச் சில பதில்கள்

வருவதற்கு முன் அழைக்க வேண்டுமா?

ஆம். முன்பதிவு செய்யவும், எந்தக் கிளினிக்கிற்கு வருவது என்பதை உறுதிப்படுத்தவும் 94435 78486 அல்லது 94442 87486 என்ற எண்ணில் அழைக்கவும்.

எந்தக் கிளினிக்கிற்கு வரலாம்?

கும்பகோணத்தில் காந்தியடிகள் சாலையிலும் செட்டிமண்டபத்திலும் எங்கள் கிளினிக்குகள் உள்ளன. இரு இடங்களிலும் திங்கள் முதல் சனி வரை, காலை 10 முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையும் சிகிச்சை அளிக்கிறோம். ஞாயிறு விடுமுறை. முன்பதிவுக்கும் வழிகாட்டுதலுக்கும் அழைக்கவும்.

முதல் சந்திப்பில் என்ன நடக்கும்?

உங்கள் பிசியோதெரபிஸ்ட் உங்கள் சிரமங்களைக் கேட்டறிந்து, உடல் இயக்கத்தையும் அன்றாடச் செயல்களைச் செய்யும் திறனையும் மதிப்பிடுவார். பின்னர் உங்களுக்கேற்ற சிகிச்சைத் திட்டத்தைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடுவார்.

குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?

ஆம். கிளினிக்கின் வழக்கமான நேரங்களில் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கும்பகோணத்தில் வீட்டிற்கு வந்து பிசியோதெரபி சிகிச்சை அளிப்பீர்களா?

ஆம். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டிற்கு வந்து சிகிச்சை அளிக்கும் சேவை உள்ளது. உங்கள் பகுதிக்கு வர முடியுமா என்பதை அறியவும், நேரத்தை ஏற்பாடு செய்யவும் 94435 78486 அல்லது 94442 87486 என்ற எண்ணில் அழைக்கவும்.

தொலைபேசியில் மருத்துவ ஆலோசனை பெற முடியுமா?

இல்லை. தொலைபேசி அழைப்புகள் முன்பதிவு செய்வதற்கும், கிளினிக்கிற்கு வருவதற்கான வழியை அறிந்துகொள்வதற்கும் மட்டுமே. உடல்நிலைப் பரிசோதனையும் மருத்துவ ஆலோசனையும் நேரில் வழங்கப்படுகின்றன.

முதல் படியை எடுத்து வையுங்கள்

உங்கள் முதல் வருகையைத் திட்டமிடலாம்

முன்பதிவு செய்யவும், எந்தக் கிளினிக்கிற்கு வருவது என்பதை உறுதிப்படுத்தவும் அழைக்கவும். மருத்துவ ஆலோசனை நேரில் மட்டுமே வழங்கப்படுகிறது; தொலைபேசியில் வழங்கப்படுவதில்லை.

அழைக்கவும்: 94435 7848694442 87486
முன்பதிவுக்கு அழைக்கவும்முகவரியைப் பார்க்கவும்